ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக எதிர் வரும் உள்ள10ராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக போட்டியிடும் அசாத் ஷாலி மற்றும் புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தல் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் கூட்டம் ஒன்று நேற்று (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதுக்கடையில் இடம் பெற்றது.
அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் அசாத் ஷாலி ஆகியோரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிää விளையாட்டுத்துறை அமைச்சர் ஜயசிறி ஜெயசேகரää பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலää ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீரää முன்னாள் ஜனாதிபதியின் பேரனும்ää கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான பிரதீப் ஜெயவர்தனää கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மன்சில் உள்ளிட்ட பலர் ககலந்து கொண்டு உரையாற்றினர்.