சபீக் ராஜாப்தீனின் பிரதேசவாத கருத்துக்களும், அதன் பின்னணி சந்தேகங்களும், தலைவரின் அதிரடி நடவடிக்கையும்.



முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது- 

முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் அவர்கள் முழு கிழக்குமாகான முஸ்லிம் மக்களையும் புண்படுத்தும் விதமாக வெளியிட்ட பிரதேசவாத கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. அது இன்று பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தலைவரின் அதிரடி நடவடிக்கை காரணமாக குற்றத்தினை ஏற்றுக்கொண்டு தான் வகித்துவந்த தேசிய அமைப்பாளர் பதவியினை மட்டுமல்லாது, நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிரதி தவிசாளர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இவரினால் சர்ச்சை ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் இவரது மேற்கத்தேய பாணியிலான நடவடிக்கைகளினால் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் பல விமர்சனங்களை எதிர்கொண்டது.

இன்று நாடுதழுவிய ரீதியில் தேர்தல் ஒன்றினை மு. கா எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், திடீரென கிழக்கு மாகான முஸ்லிம் மக்களை ஆத்திரமூட்டும் வகையிலான இவ்வாறான கருத்துக்களை சபீக் ரஜாப்தீன் ஏன் வெளியிட வேண்டும் என்பதில் பல சந்தேகங்கள் உருவாகியுள்ளது.

கட்சிக்காகவும், தலைவர் ஹக்கீமுக்காகவும் உயிரை கொடுப்பேன் என்று மேடை மேடையாக முழங்கித்திரிந்த பலர், மு.காங்கிரசை அழிக்க நினைக்கின்ற வெளி சக்திகளுக்களின் பணத்துக்கு விலைபோன வரலாறுகள் ஏராளமாக உள்ளது.

அவ்வாறு விலகிச் சென்றவர்களினால் மு காங்கிரசை அழிக்க முடியவில்லை. ஆனால் கட்சிக்குள் இருந்துகொண்டு வெளியிட்ட தேசிய அமைப்பாளரின் பிரதேசவாத கருத்துக்கள் வெளி சக்திகளின் பணத்துக்காக திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் சிந்திக்கவேண்டி உள்ளது.
எதற்கெடுத்தாலும் முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் வசைபாடுகின்ற சில முகநூலாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், சில ஊடகங்களுக்கும் சபீக் ராஜாப்தீனின் கருத்துக்கள் பழம் நழுவி பாலில் விழுந்ததுபோன்று உள்ளது.
மார்க்க பக்தியுள்ள நல்லடியார் ஒருவருக்கு பிறந்த குழந்தை, தனது தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் ஒரு குடிகாரனாகவும், நடத்தை கெட்டவனாகவும் இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அல்லாஹ்வுக்கு மாறுசெய்த நூஹ் நபியின் புதல்வர் பற்றிய வரலாற்றினை அறிந்தவர்களுக்கு இது புரியும்.
இவ்வாறான சம்பவங்கள் எமது சமூக அமைப்பில் எல்லா இடங்களிலும் நடைபெற்றுவருகின்ற அன்றாட நிகழ்வுகளாகும். 
அதுபோல் சபீக் ரஜாப்தீன் என்ற கட்சி உயர்பீட உறுப்பினர் கூறிய பிரதேசவாத நச்சுக் கருத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது வசைபாடுவதனை ஏற்றுகொள்ள முடியாது. அவ்வாறு தலைவர்மீது வசைபாடுவதானது திட்டமிட்ட அல்லது தங்களது சந்தர்ப்பவாத அரசியலை எடுத்துக்காட்டுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -