பொகவந்தலாவையிலுள்ள ஐந்து வட்டாரங்களையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கைப்பற்றும் : சோ.ஸ்ரீதரன் உறுதியுரைப்பு

க.கிஷாந்தன்-

பொகவந்தலாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடகாலத்துக்குள் நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில் பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள ஐந்து வட்டாரங்களையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கைப்பற்றுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள பொகவந்தலாவை, பொகவான , லொயினோன் , கேர்க்கஸ்வால்ட் கீழ் , கேர்க்கஸ்வோல்ட் மேல் ஆகிய வட்டாராங்களில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் , கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றிய இந்தக் கூட்டங்களில் நோர்வூட் பிரதேச சபையின் பொகவந்தலாவை பிரதேச வேட்பாளர்களான பா.சிவநேசன் , பி.கல்யாணகுமார் , உதயகுமார் , கமலதாசன் ,லோகநாதன் , இருதயமேரி , விதுஷான் லோரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

பொகவந்தலாவை பிரதேசத்தில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்பு குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் எத்தகைய அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. தொடர்ந்து இந்தப்பிரதேசம் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் திகாம்பரத்தின் முயற்சியினால் கொட்டியாக்கலை , செல்வகந்தை , கெம்பியன் போன்ற தோட்டங்களில் தனி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தோட்டப்பகுதிகளில் iமானங்கள்; , பாதைகள் செப்பனிடுதல் , குடிநீர் விநியோகத்திட்டம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை ஹோலிறோசரி தமிழ் மகா வித்தியாலயத்தைச் சகல வசதிகளும் கொண்ட முழுமையான பாடசாலையாக தரமுயர்த்தும் வகையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தத் தேர்தலைத் தொடர்ந்து மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை பொகவந்தலாவை பிரதேசத்தில் முன்னெடுக்கவுள்ளோம். நோர்வூட் - பொகவந்தலாவை பிரதான பாதை , கெம்பியன் - லொயினோன் பாதை என்பனவற்றை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இந்த நிலையில் நோர்வூட் பிரதேச சபையின் பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள ஜந்து வட்டாரங்களையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கைப்பற்றும் வகையில் வினைத்திறனுள்ள வேட்பாளர்களை நாம் களமிறக்கியுள்ளோம். ஆகவே இவர்களின் வெற்றி உறுதி செய்யப்படுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -