அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்-
இன்று சம்மாந்துறையில் மு.காவிக்குள்ள ஒரே ஒரு பிரச்சாரய ஆயுதமாக, சம்மாந்துறை பிரதேச வட்டார பிரிப்பு அமைந்துள்ளது. இந்த வட்டார பிரிப்பு தொடர்பாக, மு.கா ஒரு முன் மொழிவை தயாரித்து வழங்கியுள்ள போதும், அது தொடர்பான எந்த விதமான முன் மொழிவுகளையும் வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கின்றது.
இந்த மௌனத்தின் பின்னால் பல இரகசியங்கள் உள்ளன. அவர்களும் வீரமுனை வட்டாரத்தை பல அங்கத்தவர் வட்டாரமாகத் தான், பிரித்து வழங்கியுள்ளார். இது போன்று, இன்று அவர்கள் சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் முன் வைக்கும் பல விமர்சனங்களில் உள்ள குற்றச் சாட்டுக்களை, அவர்களும் செய்தே அனுப்பியுள்ளனர்.
இது போன்றன்றி வேறு விதமாக, அதனை சரியான முறையில் பிரிக்க முடியாது என்பது மு.காவினருக்கு நன்கு தெரியும். இருந்த போதிலும், முன்னாள் தவிசாளர் நௌசாதை ஊழல் செய்தவன் என்றோ வேறு விதமாகவோ குற்றம் சுமத்த முடியாது. அவரது ஆட்சிக் காலப் பகுதியில், அவரது கை மிகச் சுத்தமாக இருந்துள்ளது. அதன் காரணமாகத் தான், அவர்கள் முன்னாள் தவிசாளரை வட்டார பிரிப்பு சம்பந்தமாக கூறி விமர்சிக்கின்றனர்.
தங்களது வட்டாரப் பிரிப்பை, அவர்கள் வெளிப்படுத்துவாராக இருந்தால், இவர்கள் இன்று முன் வைக்கும் விமர்சனங்களை, மக்கள் அவர்களை நோக்கி முன் வைப்பார்கள். அவர்கள் இன்று முன் வைக்கும் விமர்சனத்துக்கு அவர்களே பதில் வழங்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாகவே, முன்னாள் தவிசாளர் நௌசாத் மு.காவினரின் சம்மாந்துறை வட்டார பிரிப்பை கேட்கின்ற போதும், மு.காவினர் அதனை வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கின்றனர். கடந்த கயர் பள்ளிக்கு முன்பாக இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் தவிசாளர் நௌசாத் மு.காவினரின் வட்டாரப் பிரிப்பை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர், இதில் உண்மையாளராக இருப்பின், நாளை இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும்.