அட்டாளைச்சேனையில் தகுதியானவர்களியே களமிறக்கியுள்ளோம்- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்


ட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் பொருத்தமான வேட்பாளர்களே இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றார்கள் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லாம் தகுதி, தரமும் உள்ளவர்களைத்தான் இம்முறை இக்கட்சியின் மூலம் களமிரங்கியுள்ளார்கள் என அக்கட்சியின் ஸ்தாபக பொதுச் செயலாளரும்,அரசியல் விவகாரப்பணிப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வட்டாரத்தில் போட்டியிடும் எஸ். கிதுறு மாஸ்டர் அவர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கபூர் குறிப்பிட்டார்.

இக்கூட்டம்; யு. சஹீத் ஹாஜியார் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் சட்டத்தரணி கபூர் அவர்கள் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது இப்பகுதியில் நடைபெறுகின்ற உள்ளுராட்சி பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை விட எங்கள் கட்சியின் மூலம் களம் இறங்கியுள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் பிரசித்தி பெற்றவர்களாக திகழ்கின்றார்கள். குறிப்பாக இவ்வட்டாரத்தில் போட்டியிடும் குறித்த எஸ். கிதுறு மாஸ்டர் அவர்கள் ஆசிரியத் திலகமாகவும்,அதிபராகவும் இருந்து பின்ப தொழில் வல்லுனராகவும், படித்த குடும்ப பின்னணியையும் கொண்ட ஒருவராகவும் இவர் இருந்து வருகிறார் எனவும் குறிப்பிட்டார்.

எனவே எமது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பான்மையினோர் வெற்றிபெற்று இச்சபைக்கு செல்வதற்கு உங்கள் ஆதரவும்ää ஒத்துழைப்பும் எங்களுக்கு அவசியமாகின்றது. அவர்களின் அத்தனைபேரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முதல் கூட்டமாக இடம்பெறுகின்றது எனவும் தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் உயர்பீட உறுப்பினரான யு.எம். வாஹித்ää முன்னாள் அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாசல் தலைவர் எம்.ஹாசிம் மௌலவி அவர்கள் உட்பட ஏனைய கட்சி வேட்பாளர்களும்ää தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -