கிழக்கு மக்களை பிழையாக பேசிய, மு.கா. தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் இராஜினாமா

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து இன்று (24) இராஜினாமா செய்துள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் தொடர்பில் முகநூலில் வெளியிட்ட கருத்து தொடர்பாக, இன்று (24) தாருஸ்ஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கட்சியின் கொழும்பு மத்தியகுழு அங்கத்தவர்கள் முன்னிலையில் ஷபீக் ரஜாப்தீன் விளக்கம் அளித்தவேளை தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தனது தனிப்பட்ட முகநூலில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கட்சியின் தலைமை தொடர்பில் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள் பாவித்து ஒரு சகோதரர் கருத்து வெளியிட்டபோது, பொறுமையிழந்து, அவருக்கு மாத்திரம் பதிலளித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாகவும் கிழக்கு மாகாண மக்களை எப்போதும் மதிப்பதாகவும் தனது பதிவினால் அசௌகரியங்களை எதிர்கொண்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் எப்போதும் அத்திவாரமாக திகழும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பங்களிப்பை என்றும் நினைவுகூர்ந்தவனாக, இனிவரும் காலங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்து தொடர்ந்தும் செயற்படுவேன் என்றும் உறுதியளித்தார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -