எம்.ரீ.எம்.பாரிஸ்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முண்னனியில் ஓட்டமாவடி,வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும்,கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஓட்டமாவடி மீராவோடை கிராமத்தில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தின் பிரதம அதிதியாக வா்தக வாணிப துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன்,அதன் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சா் அமீா்அலி உள்ளிட்ட ஓட்டமாவடி,வாழைச்சேனை வட்டார வேட்பாளா்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனா். இதன் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆண்களும்,பெண்களுமாக கலந்து கொண்டனா்.
இங்கு அமைச்சா் றிஸாட்பதியுதினால் ” தேசியத்தின் சமக கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும்,முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது, மேலும் முழு நாட்டிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புரட்சிகரமான அரசியல் சிந்தனை அதன் நகர்வுகள் குறிந்து அதன் தவிசாளா் பிரதியமைச்சா் அமீா் அலியினால் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.