தமது சமூகத்தையே இழிவுபடுத்திய முஸ்லிம் காங்கிரஸ் எம் பி க்கள்



முஹம்மட் சாஜிர் சாய்ந்தமருது-

டந்த பல வருடங்களாக சில அரசியல் கோழைகள் அரசியல் விமர்சனம் என்ற பெயரில் அரசியல் செய்யும் விடயம் தான் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அன்றைய திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
குமாரி கூரே என்ற பெண்ணையும் இணைத்து சோடிக்கப்பட்டு வெளிவந்த சதித்திட்டம் அன்றைய காலத்திலேயே அம்பலத்துக்கு வந்தது .

பல கோடி ரூபாய்கள் பணத்துக்கும், முக்கிய அமைச்சர் பதவிகளுக்கும் ஏமாந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்னின்ற வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அன்று போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், திருமலை மாவட்ட மு. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ.மஜீத் ஆகிய இருவரும் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் கோபத்துக்கும் விசனத்துக்கும் அன்று தொடக்கம் இன்று வரை ஆளாகியுள்ளனர்.

திட்டமிட்ட இச்சதி முயற்சிக்கான பொய்களைச் சோடித்து வெளியிடுவதன் மூலம், மு.கா. கட்சித் தலைவரை கட்சியைவிட்டு நீக்குவதுடன், கட்சியையும் அழித்துவிடலாம் என்ற நோக்கில் ஈடுபட்ட இவ்விரு முஸ்லிம் பிரதிநிதிகளும் இப்பொய்களை உண்மையாக்க பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களின் முயற்சியில் எதுவும் மக்களிடம் எடு படயில்லை என்பதுதான் உண்மை
அதனால் தான் இன்னும் முகவர்களை நியமித்து பல முயற்சிகளை செய்கிறார்கள் .

ஆனால் அன்றைய காலங்களில் இவர்களின் முயற்சி வெற்றியளிக்காததையடுத்து இவர்களுக்கெதிரான குரல் முஸ்லிம் சமூகத்தில் பலமடைந்துள்ளது.

கடந்த 2004 may மாதம் 16ஆம், 17 ஆம் திகதிகளில் அரச இலத்திரனியல் ஊடகம் ரூபவாஹினி 'ஐ" அலைவரிசையில் ஒளிப்பரப்பப்பட்ட குமாரி கூரேயின் வாக்குமூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு நாடாவைப் ( வீடியோ )பார்த்தவர்கள் இது உண்மையிலேயே சோடிக்கப்பட்ட, திட்டமிட்ட ஒரு நாடகம்தான் என உணர முடிந்தது

அன்றைய நாட்களில் அரச ஊடகங்களில் மட்டும் அடிக்கடி ஒளிபரப்பியதைப் பார்க்கும்போது, அது வேண்டுமென்றே அரசினால் திட்டமிட்டு, ரவூப் ஹக்கீமின் அரசியல் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும், முஸ்லிம் மக்களிடையே இவர்மீது வெறுப்புக்களையும், ஆவேசங்களையும் ஏற்படுத்தி கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீக்க வேண்டும், முக்கியமாக முஸ்லிம் சமூகத்தையே இழிவுபடுத்தி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இப்போலி சதித்திட்டம் அடங்கிய ஒளிநாடா ஒளிபரப்பப்பட்டது என்றே உண்மையை முஸ்லிம்கள் மட்டுமன்றி, மாற்று இன மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்

தனியார் இலத்திரனியல் ஊடகமான 'சிரச" தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இதுபற்றிய உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொருட்டு பிரஸ்தாப பெண்ணான குமாரி கூரேயுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோதுதான், இதன் உண்மைத் தன்மையை அவராகவே வெளியிட்டார். அவர் கூறும்போது, முன்னர் வெளிவந்த ஒளிநாடா என்னை ஏமாற்றி, ஆசைவார்த்தைகளைக் கொட்டி, பயமுறுத்தியும் என்னைக் கொண்டு பொய்களால் சோடிக்கப்பட்ட ஒரு நாடகம் எனவும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலைச் செய்துவிட்டேனே என்ற மன உறுத்தலினால் நடந்தவைகளை உண்மையாகக் கூறுவதாகவும் அளித்த செவ்வியை, ( வீடியோ ) கடந்த 2004 may மாதம் 17 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 11.30 மணிவரை தமிழாக்கத்துடன் 'சிரச" தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை இன, மத கட்சி வேறுபாடின்றி பார்த்தவர்கள் இதுதான் உண்மை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

இதனால், வெகுவாகப் பாதிக்கப்பட்ட மு காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பதற்றப்படாமல் அன்று தொடக்கம் இன்று வரை நிதானமாக தனது கடமைகளைச் செய்துவருகின்றார். இவரின் நிதானமான போக்கும் பொறுமையும் அரசியல் சாணக்கியமும்தான் அவரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெண்ணை சம்பந்தப்படுத்தி அவதூறுகளை ஏற்படுத்தியும் எத்தனையோ பேர் பணம் - பதவி ஆசையினால் கட்சியை விட்டு 'பல்டி" அடித்துக்கொண்டு சென்றும், தனிமரமாக நின்றாவது கட்சியைக் காப்பாற்றுவேன் என்ற மனஉறுதி அவரிடம் என்றும் இருக்கின்றது. அந்த மனஉறுதி தான் இன்று முஸ்லிம் காங்கிரசின் இவ்வளவு வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்து வருகிறது முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ஆளுமையும் பொறுமையினாலும் தான் இந்த கட்சி இன்னும் முஸ்லிம்களின் உரிமை குரலாக திகழ்கிறது .


தொடரும் ....

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -