கல்முனை எம்.என்.எம் அப்ராஸ்-
கல்முனை தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தமொன்றை (16) மேற்க்கொண்டனர். நிரந்தர பஸ் தரிப்பிடத்தையும் அவர்கள்து இணைந்த சேவையும் வேண்டியும் இப் போராட்டம். மேற்க்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. நாடு பூராகவும் ஒருங்கிகிணைந்த பஸ் சேவை காணப்படுகின்றது கல்முனை-மடடக்களப்பு,அம்பாறை- கல்முனை ,திருகோணமலை-கல்முனை ஆகியவற்றுக்கு இணைந்த சேவை உள்ளது ஏன் எங்களக்கு மட்டும் இந்தப் பராமுகம் பார்க்கப்படுகின்றது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் நியாயங்களை முன்வைத்தனர்.
இவ் விடயம் தொடர்பாக ,கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் உதவிபணிப்பார் ஏ.டி உதய நிதி சிந்தக மற்றும் ,கல்முனை போலீஸ் பொறுப்பத்திகாரி,கல்முனை தனியார் பஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஏ அப்துல் கரீம் முன்னிலையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபடடவர்களின் கோரிக்கை செவிசாய்க்கப்பட்டதுடன் இது தொடர்பாக (17-1-2017) திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையில் விசேட சந்திப்பு ஒன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் இவர்களின் இரண்டு பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளது.
இதன் பின் இவ் தனியார் பஸ் ஊழியர்களின் போராட்டம் மானது நிறைவு செய்யப்பட்டதுடன் மீண்டும் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. குறிப்பாக இவ் கோரிக்கை நிறைவு செய்யப்படாத பட்சத்தில் எமது போராட்டம் தொடரும் என ஆர்பாட்டத்தில் ஈடுபடடவர்கள் தெரிவித்தனர் .