அம்பாறையில் வெற்றியுடன் வீடு திரும்பினார் அமைச்சர் றிசாத்

ஜெமீல் அகமட்-

அம்பாறையில் கல்லெறிந்து பொல்லெறிந்து கூக் குரலிட்டும் மயிலை விரட்ட முடியாது அது மக்கள் ஆதரவுடன் சமுதாயத்தை பாதுகாக்க வானில் பறந்து கொண்டே இருக்கும் என்பதை வங்குரோத்து அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் 

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு அம்பாறை மாவட்ட அரசியல் நிலை மக்களின் நிலைகளை சிந்தித்து பாருங்கள் எமது மக்களை ஏமாற்றி சிலர் சுகபோகம் வாழ்கின்றனர் தவிர அவர்களுக்கு 17 வருடம் வாக்களித்த மக்களுக்கோ சமுதாயத்துக்கோ எந்த நன்மையும் இல்லை இதை புரிந்து கொண்டும் ஏமாற்றுவாதிகளின் பேச்சுக்கு அடிபணிந்து சிலர் இன்னும் அம்பாறையில் கூலிக்கு மாரடிப்பது எமது சமுதாயத்துக்கு செய்யும் துரோகமாகும்

இன்றைய நாட்டின் நிலையை பொறுத்த வரை சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய நிலை தோன்றியுள்ளது அந்த நிலையை நாம் எமது சமுதாயத்துக்கிடையில் ஏற்படுத்தும் போது அது சிலரின் அரசியல் வியாபாரத்தை பாதித்து அவர்களின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் என்ற அச்சத்தில் முஸ்லிம் சமுதாயத்தை ஒறுமைப்பட விரும்பாமல் சதிகளை செய்கின்றனர் அதில் முக்கிய பங்கு வகிப்பவர் தான் நாம் அனைவரும் அறிந்த நடிகர் றவூப் ஹக்கிம் அவர்களேயாகும் அதனால் இந்த ஹக்கிமை முஸ்லிம்களின் அரசியல் கண்னோட்டதிலிருந்து நீக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்தின் சமுதாய நலன் கொண்ட கல்விமான்கள்,புத்திஜிவிகள் அரசியல்வாதிகள் எல்லோரும் சிந்தித்து அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமையில் ஒன்று சேர்ந்து இருப்பது ஏமாற்றுவாதிகளின் நித்திரையை கிழித்து விட்டது அதனால் அவர்கள் எதிர்வரும் தேர்தலின் பின் என்ன செய்வது என்று தெரியாமல் தீண்டாடும் நிலையை நேற்று கல்முனையில் நடைபெற்ற மயில்களின் கூட்டத்தில் கண்டுகொள்ள முடிந்தது 

எதிர்காலத்தில் எமது சமுதாயத்தின் நிலை என்னவாகும் என்று மக்கள் சிந்திக்கும் போது சிலர் எதிர்காலத்தில் நமது பதவி என்னவாகும் என்று ஹக்கிம் குழுவினர் வேதனைப்படுகின்றனர் அவர்களுக்கு பின்னால் எமது சமுதாயம் 17 வருடம் சென்ற போதும் இனியும் செல்லக்கூடாது என்ற முடிவை தீர்க்கமாக எடுத்து விட்டனர் என்பதை நேற்று அம்பாறை மாவட்ட நிந்தவூர் சம்மாந்துறை கல்முனை மருதமுனை மாவடிப்பள்ளி போன்ற ஊர்களில் சமுதாய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டாக இருந்தது இதற்கு காரணம் அன்று ஒரு காலத்தில் தக்பீர் முழக்கத்துடன் மக்கள் தோளில் தூக்கி மேடையில் அமரவைத்த தலைவன் இந்த சமுதாயத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் செய்த துரோகமாகும் அதனால்தான் மக்கள் இன்று ஹக்கிமை நிராகரித்து அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் கரத்தை பலப்படுத்தி அவரை இந்த முஸ்லிம் சமுதாயத்தின் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நேற்று( 06)அம்பாறை மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு உறுதியுடன் சொல்லி விட்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர் அதில் இருவர் பிரதி அமைச்சர்கள் அவர்களின் சொந்த ஊர்களில் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் நேற்று ஆரம்பமாகியது அங்கு( மயிலுக்கு ) அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதரவாக ஒன்றுதிறன்ட மக்கள் வெள்ளம் என்பது அந்த ஊர்களின் அரசியல் வரலாற்றில் பொண் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய விடயம் என்று தான் கூற வேண்டும் 

நிந்தவூரில் பல அரசியல்வாதிகள் கூட்டம் நடத்தியுள்ளனர் ஆனால் நேற்று அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த மக்கள் வெள்ளம் என்பது ஒரு வரலாற்று பார்வை நிந்தவூர் மக்கள் அவர்களின் அரசியல் நாயகன் M M முஸ்தபாவுக்கு கொடுக்கும் கௌரவத்தை அமைச்சர் றிசாத் அவர்களுக்கு கொடுத்துள்ளனர்

சம்மாந்துறை மக்களின் மனதில் இன்றும் குடியிருக்கும் மர்ஹும் அப்துல் மஜிட் B A அவர்களுக்கு கொடுத்த கௌரவத்தை அந்த மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு மனப்பூர்வமாக கொடுத்து சம்மாந்துறையின் நாயகனாக ஏற்றுக்கொண்டனர்

கல்முனை மண்ணில் சமுதாயத்தின் நலனுக்காக ஒளி விளக்காய் பிரகாசித்த மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் மீது கல்முனை மக்கள் கொண்டிருக்கும் மதிப்பு மரியாதையை அந்த மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு கொடுத்து சின்ன அஸ்ரப் என அன்பாக கோசமிட்ட சத்தம் சில சமுதாய துரோகிகளின் காதில் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததால் மக்கள் ஆனந்தம் அடைந்தனர் 

என்ன செய்யலாம் அல்லாஹ் தனது படைப்புகளின் நலனுக்காக வானிலிருந்து பூமியில் மழையை பொழியும் போது இடி மின்னல் சத்தம் கேட்கின்றது மக்கள் அச்சமும் நன்மையும் அடைகின்றனர் அதுபோல் தான் அமைச்சர் றிசாத் மக்களின் நலனுக்காக அரசியல் செய்யும் போது சிலர் இடி மின்னல் போல் செயல்படுவதை கண்டு மக்கள் அச்சம் கொள்ளாமல் சந்தோஷம் அடைகின்றனர் மக்கள் நலனுக்காக போராடும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அடிக்கிற கை தான் அனைக்கும் என்பது போல் எதிர்காலத்தில் அமைச்சரை அரவனைத்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை 

நேற்றைய கூட்டங்கள் என்பது அம்பாறை மாவட்டத்தில் இது வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்த சபைகளின் ஆட்சியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுகிறது என்பதை உறுதிபடுத்தியது அதற்காக மக்கள் தனது ஆனையை அடுத்த மாதம் 10 திகதி அவர்கள் தனது வாக்கு சிட்டில் அதிகார புள்ளியை மயில் சின்னத்துக்கு நேரே இடுவார்கள் என்பதை தேசிய தலைவருக்கு மக்கள் கூறி விட்டனர் 

தேர்தலின் பின் அம்பாறையில் ஊழல் அற்ற மக்கள் நலன்கொண்ட அபிவிருத்திகள் நடைபெற்று சமுதாய நலனும் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கிய அமைச்சர் றிசாத் அவர்கள் தனது கண்கனிப்பில் அம்பாறையை அபிவிருத்தி செய்வேன் என்று கூறி விட்டு வெற்றியுடன் வீடு திரும்பினார் 

எனவே அமைச்சர் றிசாத் அவர்களின் இலட்சியம் நிறைவேறி நாட்டில் நாம் சுதந்திரமாக வாழ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் அத்தோடு மயிலின் வெற்றி எமது சமுதாயத்தின் வெற்றி என்பதை நாம் ஒவ்வொருவரும் மறந்துவிடக் கூடாது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -