அதிபர் பவானியை முழந்தாளிடச் செய்த முதலமைச்சரை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற வேண்டும்.






இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் காட்டமான கோரிக்கை!!

காரைதீவு நிருபர் சகா-
துளை தமிழ் மகாவித்தியாலய அதிபர் ஆர்.பவானியை முழந்தாளிடச் செய்த ஊவா மாகாண முதலமைச்சரை அரசியல் அரங்கில் இருந்து அகற்றுமாறு கௌரவ ஜனாதிபதி அவர்களை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வினயத்துடன் கேட்டுள்ளது.

சங்கம் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கையை சங்கத்தின் தலைவர்
வி.ரி.சகாதேவராஜாவும்இ நிர்வாச் செயலாளர் கே.நல்லதம்பியும் கூட்டாக
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

காலம் காலமாக தமிழ்பேசும் அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும்பான்மை இனம்சார்ந்த அரசியல்வாதிகளால் அடக்கப்பட்டே வருகின்றனர். அதன் உச்சக்கட்டமாக பதுளை தமிழ் மகாவித்தியாலய அதிபர் ஆர்.பவானி அவர்கள் ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிடப் பணிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் அதிபர்கள் தமிழ் ஆசிரியர்கள் என்ன கிள்ளுக்கீரைகாளா? இந்த
அரசியல்வாதிகளை உருவாக்கியவர்களே ஆசிரியர்களே.

கைகூப்பி வணங்கும் தெய்வங்களாக மதிகப்படவேண்டிய அதிபர் ஆசிரியர்களை மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ள முதலமைச்சர் சாமர சம்பத்என்பவரை அரசியல் அரங்கில் இருந்து முற்றாக வெளியெற்றுமாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் கௌரவ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர்கள் என்றால் எதையும் செய்யச் சொல்லலாம். என்ற எண்ணம் பெரும்பான்மை இனம் சார்ந்த உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களிடம் இருப்பதனை முதலமைச்சரின்நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு,
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையைப் பின்பற்றிய அதிபருக்கு இவ்வாறு தண்டனை
வழங்கியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகையால் இவர்மீது
நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதிபர்களும்இ ஆசிரியர்களும் அரசியல் சார்ந்த
எவரையும் மதிக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கைகள் அமையும் என்பதனை இலங்கைத்
தமிழர் ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதோடுஇ
குறித்த அதிபரிடம் முதலமைச்சர் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -