கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கலன்று நேற்று பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து பிரமாண்டமாக நடைபெற்றது..
இவ்விழா முதன்முறையாக கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெறுகிறது. இப்பிராந்தயித்தில் உள்ளுராட்சித்தேர்தலில் அரசியல் கட்சி சுயேச்சைகளில் வேட்பாளர்களாக நிற்கும் தமிழ் வேட்பாளர்கள் பலர் கட்சிபேதமற்று கலந்துகொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாட்டு வண்டிலில் பாரம்பரியமுறைப்படி பொங்கல் பொருட்கள் எடுத்துவரப்பட்டு பொங்கல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.