UNP கொழும்பு முஸ்லிம்களை அவர்களின் அரசியல் அடிமைகளாகவே பாவித்து வந்துள்ளனர்

தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்பு முஸ்லிம்களுக்குஅக்கட்சி கொடுத்த பிரதி உபகாரம் நூறு வீடுகளுக்கு ஐந்து மலசலகூடம் என கொழுப்புமாநகர சபைக்கு பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர் செனானி சமரநாயககுறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் மத்திய கொழும்பு முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு விஜயம்செய்த அவர் அங்கு அவர்களிடம் கருத்து வெளியிடுகையில் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளிட்ட அவர்,

மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என அக்கட்சி காரர்கள்பெருமையாக கூறுவார்கள் ஆனால் அக்கட்சி அம்மக்களுக்கு செய்துள்ள சேவைகள் எனஎதுவும் இல்லை.

தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்பு முஸ்லிம்களுக்குஅக்கட்சி கொடுத்த பிரதி உபகாரம் நூறு வீடுகளுக்கு ஐந்து மலசலகூடம்,நான்அறிந்தவரை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கொழும்பு மத்தியில் வீட்டுபிரச்சினைபாரிய அளவில் உள்ளது.

ஒரு அறையில் மூன்று குடும்பங்கள் வாழும் அகலமும் இங்குஇடம்பெறுகிறது.அதேபோல அரசாங்க பாடசாலைகளில் அடைப்படை வசதிகள் மிகஅரிதாக காணப்படுவதால் கூலித்தொழிலாயின் பிள்ளைகளும் சர்வதேசபாடசாலைகளில் பணம் செலுத்தி கல்வி கற்க வேண்டிய நிலையே உள்ளது.

உண்மையில் கொழும்பு முஸ்லிம்களை ஐக்கிய தேசிய கட்சி வாக்களுக்கும்இயந்திரமாக பயன்படுத்திவருகின்றனர்.இந்த நிலை மாறவேண்டும். கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆட்சியில் சில முஸ்லிம்அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஊடாக பலதரப்பட்ட அபிவிருத்தி பணிகளைமுன்னெடுத்தார்கள். 

வடக்கில் கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக அங்குள்ள முஸ்லிம்கள்பல்வேறுபட்ட அபிவிருத்திகளை பெற்றுக்கொண்டார்கள் ஆனால் வடக்கு கிழக்குக்வெளியே குறிப்பாக கொழும்பு முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்அடிமைகளாக இருந்து பெற்றுக்கொண்டது எதுவுமே இல்லை என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -