ஜெம்சித்(ஏ)றகுமான்
மருதமுனை.
நடைபெற்று முடிந்த கல்முனை மாநகரசபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டவர்கள் சார்பில் அதிகூடிய (583) வாக்குகளை பெற்றதோடு மாத்திரமன்றி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (151) கல்முனை மாநகரில் பெற்று தோல்வியை தழுவிக்கொண்ட இளைஞன் சிபான் BM க்கு பட்டியல் ஆசனங்களில் ஒன்றை வழங்கக் கோரி 5ம் வட்டார மக்கள் தலைவர் ரிசாட் பதியுதீனிடம் மனு ஒன்றினைக் கையளித்தனர்.
சுமார் முன்னூற்றி ஐம்பதற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட இம்மனுவில் கன்னி வாக்களித்த பல இளைஞர்கள் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களை வழிகேட்டுக்கு இட்டுச்செல்லா நடைமுறைகளைக் கையாண்டு அரசியல் செய்த சிபான் மருதமுனை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ஆகவே மாற்றம் வேண்டி வாக்களித்து மருதமுனை மண்ணில் முஸ்லிம் காங்கிரஸ் அபேட்சகரைத் தோற்கடித்த 5ம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்த சிபானைப் போன்ற துடிப்புள்ள இளைஞர்களை வலுவடையச் செய்வதோடு போணஸ் ஆசனத்தில் ஒன்றை இளம் தலைமுறைக்கு வளங்கிப் பார்த்தல் சாலப்பொருத்தமானதே