ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பொரளை அஹதிய்யா மற்றும் இஸ்லாமிக் கல்வி நிலையமும் இணைந்து இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை இன்று (04) கொண்டாடியது. அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் தெமடகொட அல்-ஹிஜ்ரா மகாவித்தியாலத்தில் இடம் பெற்ற நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக ஸ்ரீ சுதர்மாராமய விஹாரையின் விஹாராதிபதி கிரிஇப்பன் ஆர்.ஏ. விஜித ஹிமி உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிரதம அதிதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதையும் அருகில் ஏனைய அதிகளையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
வரவேற்புரையை அஹதிய்யாவின் அதிபர் ஷிப்லி ஹாசிமும் விஷேட துஆப் பிஜரார்த்தனையை அஹதிய்யாவின் மௌலவி சபீக்கும் நிகழ்த்தினார்கள்.