சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் செல்வா (சிவப்பு) இல்லம் 468 புள்ளிகளைப் பெற்று இவ்வருடத்தின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி எஸ்.ஆர்.எம்.சிறியபுஸ்பம் தலைமையில் சாந்த குரூஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் (15) இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம், அக்கரைப்பற்று 241வது இராணுவப் படைப் பிரிவின் தலைமை கட்டளையிடும் தளபதி கேர்ணல் விபுல சந்திர சிறி, சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு தந்தை அருட்தந்தை எஸ்.இக்னேஸியஸ், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் ஏ.முஸ்தாக்அலி, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள் கே.எம்.எஸ்.நஜ்ஜாஸ், இஸட்.எம்.மன்சூர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை டிசெல்ஸ் (மஞ்சள்) இல்லம் 464 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் டெய்லி (பச்சை) இல்லம் 455 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இதன்போது மாணவர்களின் அணி நடை, சிறுவர் நிகழ்ச்சிகள், மெய்வல்லுனர் போட்டிகள், உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை போட்டி என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.