கிண்ணியா பெரியாற்று முனைப்பகுதியில் கரையோரத்தில் வைக்கப்பட்ட இரு மீனவர்களின் வலைக்கு இனந்தெரியாதோரால் நேற்று(04) தீவைக்கப்பட்டுள்ளதாகவூம் எறிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழிலாழர்கள் இருவரும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
கடல் தொழிலுக்காக சென்று தங்களது வல்லங்களை நிறுத்தும் பெரியாற்று முனை பகுதியில் வைக்கப்பட்ட இறால் வலைகளையே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.சுபஹ் நேரத்தின்போது மதக் கடமையை நிறைவேற்றி விட்டு வெளியே காலை 6.15 மணியளவில் தீபற்றுவதை கண்ட அப்பகுதி நபர் ஒருவரே தீயை அனைத்துள்ளதாகவும் தெயிவிக்கப்படுகிறது.
நூல் வலைகளான இவ் விருவருக்கும் சொந்தமான வலைகள் இரண்டும் சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வலை என்றும் தெரிவித்தனர்.