கல்முனையில் திலகா எரிபொருள் நிரப்பு நிலைய திறப்பு விழா


பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனையில் திலகா எரிபொருள் நிரப்புநிலைய திறப்பு விழா வெள்ளிக்கிழமை (16-02-2018) கல்முனையில் திலகா எரிபொருள் நிரப்புநிலைய திறப்பு விழா உரிமையாளர் வி.அழகுராஜா தலைமையில் நடைபெற்றது. இங்கு லங்கா ஐ.ஒ.சி பி.எல்.சி நிறுவனத்;தின் இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் ஷியாம் பொஹ்றா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தைத் திறந்து வைத்தார்.

லங்கா ஐ.ஒ.சி பி.எல்.சி நிறுவனத்;தின் பிரதிநிதிகளான சித்தாரா அக்ரவல், பி.பி.பற்றா,அன்ஜூ ஜஆயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.இங்கு எரிபொருள் நிரப்புநிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு விஷேட அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.மேலும் பிரதம அதிதிக்கு திலகா எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர் வி.அழகுராஜா பொன்னாடை போர்த்தி கெரவித்தார்.

எரிபொருள் நிரப்புநிலைய வளாகத்தில் அதிதிகளால் மரக்கன்றுகளும் நடப்பட்டன,மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றது.டொக்டர் கே.ஜெயசுதன் நிகழ்;வை நெறிப்படுத்தினார்














எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -