
.
ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகப் பிரிவின் கீழுள்ளை வாழைச்சேனை தியாவட்டவான் பிரதான வீதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தாருஸ்ஸலாம் அரபுக் கலாபீடம் அல்லாஹ்வின் உதவியால் அதன் அதிபர் மற்றும் நிருவாகத்தின் அயராத முயற்ச்சிகளின் காரணத்தால் பல்வேறுபட்ட முன்னேற்றங்களையும், சாதனைகளையும் கண்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
அந்த வகையில் உலகத்தில் எந்தப்பாகத்தில் வாழ்ந்தாலும் இஸ்லாமிய அறிவை ஏனையவர்களும் அறிந்துக்கொள்ள வேண்டும், தெரிந்துக்கொள்ள வேண்டுமென்ற நல்லதோர் நோக்கத்தில் தாருஸ்ஸலாம் கலாபீடம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான Www.dharussalam.org சேவையினை ஆரம்பித்துள்ளது.
இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வினை கலாபீடத்தின் தலைவரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்ஹ் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம். முஸ்தபா சலாமி மற்றும் உலமாக்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.