நாபீர் பெளண்டேசனின் உத்தியோக பூர்வ முகநூலினை முறைகேடாக பாவித்தமைக்கு எதிராக மான நஸ்ட்ட வழக்கு தாக்கள் செய்யும் வகையில் சம்மாந்துறை பொலிசில் முறைப்பாடு..


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
டந்த 15.02.2018 சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் உத்தியோக பூர்வ முக நூலினை (nafeer-foundation youths) களவாக கையாடி பெளண்டேசனுக்கும், அதன் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பதிவேற்றங்களை மேற்கொண்ட நபருக்கும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் எதிரான மான நஸ்ட்ட வழக்கினை தொடுக்கும் வகையில் சட்டத்தரனி ஊடாக சம்மாந்துறை பொலிசில் நேற்று 16.02.2018 முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு கிழக்கிழங்கையிலும் தனது சமூக சேவைகளை விஸ்தரித்து செயற்பட்டு வரும் நாபீர் பெளண்டேசனானது அம்பாறை மாவட்டத்தில் இஸ்தீரமான அரசியலினை ஏற்படுத்தும் வகையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது அரசியல் ரீதியான பங்களிப்பினை மேற் கொண்டிருந்தது. குறித்த நாபீர் பெளண்டேசனின் உள்ளூராட்சி தேர்தலை ஒட்டிய அரசியல் செயற்பாடானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை ஆதரிக்கும் வகையிலும் அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாது முழு கிழக்கிழங்கையிலும் விஸ்தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்க விடயமாகும்.

அந்த வகையில் குறித்த விடயத்தினை தாங்கிகொள்ள முடியாத அரசியல் காற்புணர்சி கொண்ட சிலரும், பெளண்டேசனில் இருந்து தானகவே விளகி சென்ற உறுப்பினர்களுமே இவ்வாறான நாசாகார செயலில் ஈடுபட்டுள்ளதாக பெளண்டேசனும், அதன் இஸ்தாபக தலைவரும் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறு இருந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமன தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீதி மன்றத்தினை நாடும் வகையில் மான நஸ்ட்ட வழக்கு தொடுப்பதற்காக பொலிசில் முறைப்பாடு செய்துள்லதாகவும் மேலும் தெரிவித்தார் அதன் இஸ்தாபக தலைவர்-பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -