குழப்பத்தை தீர்த்து வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்-மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர்



நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, ஜனாதிபதியையும், பிரதமரையும், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர், நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவசர கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், அவர், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்ப நிலை என்பன நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

”இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் ஆட்சி மற்றம் பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படும். எனவே அரசாங்கம், கடந்த அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

விவசாயம், மதங்கள், கலாசாரம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்” என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -