காரைதீவு நிருபர் சகா -
கல்முனையில் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எங்களை வெற்றியடைய செய்த கல்முனை பிரதேச மக்களுக்கு எனது நன்றிகள். எங்களது வெற்றியின் பங்குதாரர் கல்முனை பிரதேச மக்கள் ஒவ்வொருவருமே. என கல்முனை மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவர் கென்றி மகேந்திரன் மக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்….
கல்முனை பிரதேசத்தின் நிலைமையை கருத்தில் எடுத்து இப்பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எம்மை வெற்றியடைச் செய்துள்ளார்கள். எமது மக்களின் உணர்வுகள் பற்றுகளுக்கு நான் தலைவணங்குகின்றேன். மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டியது எங்களது தலையான கடமை.
எங்களது வெற்றி கல்முனை தமிழர்களது வெற்றி எமது வெற்றிக்காக தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருமித்து வாக்களித்து கல்முனையின் இருப்பை பாதுகாக்க இரவு பகலாக உழைத்த கல்முனை பிரதேச இளைஞர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்குதாரர்கள்.

இவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டியதும் எமது கடமை. இளைஞர்கள் அனைவரும் இதே போன்று ஒற்றுமையாக தொடர்ந்து செயற்பட வேண்டியது எமக்கு மேலும் பலம் சேர்க்கும். கல்முனை பிரதேச இளைஞர்களின் பங்குபற்றுதல்களுடன் எமது செயற்பாடுகள் அமையும். அனைத்து இளைஞர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.