- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர். உலமா கட்சி.
இதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.
1. வட்டார உறுப்பினர்கள், மற்றும் பட்டியல் வேட்பாளர் தொகை குறைக்கப்பட வேண்டும். உதாராணமாக கல்முனையில் 23 பேர் வட்டாரத்திலும் 16 பேர் பட்டியல் மூலமும் தெரிவு செய்யபடுகின்றனர். இதில் வட்டார எல்லைகள் விரிவு படுத்தப்பட்டு உறுப்பினர்கள் குறைக்கப்பட வேண்டும். இரண்டு வட்டாரங்கள் ஒன்றாக ஆக்கப்பட வேண்டும். அதன் படி மொத்தம் 13 வட்டாரங்களும் பட்டியல் மூலம் 10 பேரும் தெரிவு செய்யப்பட வேண்டும். மொத்தம் 23 பேர். இதன் மூலம் மக்கள் பணம் வீணாகுவதை தடுக்க முடியும்.
2. பெண்கள் 25 வீதம் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படலாம். (ஐரோப்பியர்களை திருப்திப்படுத்துவதற்காக). அது வட்டாரமோ பட்டியலோ எதுவாக இருப்பினும் தனியாகவோ இரண்டையும் சேர்த்தோ 25 வீதமாக இருந்தால் போதும். வட்டாரத்தில் அல்லது பட்டியலில் அல்லது இரண்டிலும் சேர்த்து 25 வீதம் இருந்தால் போதும். வெற்றிபெறாத நிலையுலும் பட்டியலில் இருந்து கட்டாயம் பெண்கள் சபைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது முற்றாக நீக்கப்பட வேண்டும்.
3. சிறுபான்மை வாக்காளர்கள் வாழும் பகுதியில் நிலத்தொடர்பற்ற வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக ஒரு வட்டாரத்தில் 30 வீதத்துக்கு குறைந்த சிறுபான்மை வாக்காளர்கள் இருந்தால் 50 வீதத்துக்கு அதிகமாக அதே சிறுபான்மை மக்கள் உள்ள இன்னொரு வட்டாரத்தில் அவர்களின் விருப்பம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.
4. தேர்தலில் போட்டியிடும் வட்டார வேற்பாளர் அதே உள்ளுராட்சி சபைக்குள் முகவரி உள்ளவராக இருக்கலாம். இது விடயம் பட்டியல் வேற்பாளர் விடயத்தில் செல்லுபடியற்றதாக்க வேண்டும்.