கையும்மெய்யுமாக பிடிபட்ட திருடன்; பொதுமக்களால் நையப்புடைப்பு


க.கிஷாந்தன்-

த்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் மத்திய பிரிவு பகுதியிலுள்ள வீடுகளில் தனது கைவரிசையைக் காட்டுவதற்காக வந்த திருடன் ஒருவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது 05.02.2018 அன்று காலை 6 மணியளவில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு திம்புள்ள பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

05.02.2018 அன்று அதிகாலை 3 மணியளவில் வீடு ஒன்றில் திருட முற்பட்ட வேளையில், திருடனை கண்ட சிறுமி ஒருவர் கூச்சலிட்டபோது, அங்கு வந்த இளைஞர்களும், பொதுமக்களும், பாய்ந்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடனை மவுண்ட்வேர்ணன் காட்டுப்பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து நையப்புடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து திம்புள்ள பத்தனை பொலிஸாரிடம் குறித்த திருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

அத்துடன் குறித்த திருடனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல தோட்டப் பகுதிகளில் 05.02.2018 அன்று அதிகாலை திருடர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பொலிஸாருக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த திருடனை சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -