சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் திரியாய் வேட்பாளராகப் போட்டியிடும் பரமேஸ்வரன் (பஞ்சன்) இன்று 4.2.2018 இரவு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்
தென்னவன் மரபு அடி (தென்னமரவாடி) யில் கட்சிப் பணிகளை முன்னெடுத்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் இவர் மீது தாக்குதலைத் தொடுத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை (தேர்தல் சட்டத்திற்கு முரணானது) ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்
சிறிய காயங்களுக்கு உள்ளாகிய அவரது முறைப்பாட்டை குச்சவெளி காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் உவர்மலைக் காரியாலயம் தாக்கப்பட்டு அங்கிருந்த விளம்பர பலகைகள் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்விடயம் தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.