தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி கூடிய விரைவில்


டைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்எம்மொஹமட் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் (பெண் selected) பெயர்களை கட்சி செயலாளர்கள் அனுப்பிவைக்கும் பட்சத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் மாகாணசபைகள் உள்ளுராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை மார்ச் மாதம் முதல்வாரத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கப்பெறும் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் வர்த்தமானி அறிவிப்பின் பின்னரே என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -