கிழக்கில் 200ஆசிரியர்க்கு பயிற்சி - பணிப்பாளர் டிவகலாலா தகவல்!
காரைதீவு நிருபர் சகா-முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒருவருட முன்பள்ளிக்கல்வி டிப்ளோமா 2017/2018 ஆம் ஆண்டுக்கான கற்கைநெறியின் அங்குரார்ப்பணவைபவம் இன்று(18) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு கல்முனையில் நடைபெறவிருக்கிறது.
ஆறுதல் நிறுவனம் றோட்டரிக்கழக அனுசரணையுடன் நடாத்திவரும் இப்பயிற்சி நெறியின் இரண்டாவது அணியினருக்கான அங்குரார்ப்பணவைபவம் கல்முனை இணைப்பாளர் பி.சிவப்பிரகாசம் தலைமையில் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அணியில் 50முன்பள்ளி ஆசிரியைகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று 11மணியளவில் திருக்கோவில் தம்பிலுவில் தேசிய கல்லூரியிலும் மற்மொரு 50ஆசிரியர்கள் கொண்ட அணியினருக்கான கற்கைநெறி ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
ஆறுதல் நிறுவன முன்பள்ளி நிகழ்ச்சித்திட்டத்தின் நிபுணத்துவஆலோசகர் எஸ்.மாதவகுமாரன் அதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றுவார். கல்முனை றோட்டரிக்கழக தலைவர் எம்.சிதம்பரநாதன் கௌரவஅதிதியாகக்கலந்துகொள்வார். வளவாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கில் 200பேருக்கு பயிற்சி!
ஆறுதல் நிறுவனம் றோட்டரிக்கழக அனுசரணையுடன் வடக்குகிழக்கில் இரண்டாவது வருடமாக நடாத்திவரும் இம் முன்பள்ளிக்கல்வி டிப்ளோமா கற்கைநெறியினை இதுவரை 3205 ஆசிரியர்கள் பூர்த்திசெய்து பயன்பெற்றுள்ளனர் என்று ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுந்தரம் டிவகலாலா தெரிவித்தார்.
கிழக்கில் இம்முறை 200 ஆசிரியர்களுக்காக இவ் ஒருவருட கற்கைநெறி 5இடங்களில் நடாத்தப்படும்.
நேற்று (17) திருகோணமலை மூதூர் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இன்று(19) கல்முனை திருக்கோவில் ஆகிய இடங்களிலும் கற்கைநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகின்றது.