இலக்ஸன் காலத்து இஸ்லாம்
++++++++++++++++++++++++++
Mohamed Nizous
அள்ளாஹ் மீது சத்தியங்களும்
அலட்சியமாய் நோக்கப் படும்
அழிவுச் சத்தியங்கள்
மலிவு விலையில் கோரப்படும்
ஹலால் ஹறாம் என்பது
கட்சியா எதிரியா என்பதில்
கன்பர்ம் பண்ணப் படும்
மேடைத் தெளபாக்கள்
தாடை கிழிய கேட்கப்படும்
கூடி நிற்பவர்கள்
ஆடிப் போய் அழுவார்கள்
வாக்கு சதகாவாகும்
வாக்கு தெளபாவாகும்
வாக்கு அமானிதமாகும்
வாக்கு ஷிர்க் ஆகும்
வாக்கு பர்ள் ஆகும்
ஆசனம் பெறுவதற்காய்
தூஷனமும் தொடுக்கப்படும்
புறம் பேசல்
பொய் பேசல்
புதுசாய் ஹலால் ஆகும்.
அடுத்தவனின் மானம்
அசிங்கப் படம் பகிர்தல்
அடி தடி சண்டைகள்
அத்தனையும் ஆகுமாகும்
பட்டாசு வெடித்தல்
படாடோபம் செய்தல்
திட்டுதல் முட்டுதல்
தேவையின்றி ஏசுதல்
முற்று முழுதாக
முறையான செயலாய் மாறும்.
சலாம் சொல்லும் ஒலியால்
சந்திகள் அதிரும்
ஒலி பெருக்கிக் கிறாஅத்கள்
ஓயாது ஒலிக்கும்
தொப்பி தாடி
தூய்மை ஆடை
அப்படியே அவ்லியா போல்
அபேட்சகர் மாறுவார்
இ,°,லாஸ் என்பதற்கு
இடைவேளை கொடுக்கப்படும்.
பிச்சை கொடுத்ததற்கும்
பேனரில் புகழப்படும்.
அஹ்லாக் என்பதை
அடுத்த கட்சி ஆட்களுக்கு
காட்டுவது ஹறாம் போன்று
கடுமைகள் காட்டப்படும்
குறு நிலப் பரப்பின்
ஒரு சிறு பலத்துக்காய்
மறுமையின் நன்மைகள்
மண்ணாக்கப் படுவதனை
ஒரு சிலர் உணர்ந்து
உண்மையாய் நடப்பார்.
ஆனாலும் அதிகம் பேர்
அலட்சியமாய் இருக்கிறார்