இந்துக்களின் புனித சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்.செல்வச்சந்தி ஆலயத்திலிருந்து கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய பாதயாத்திரை கடந்த 7நாட்களின் பின்னர் இன்று(13)செவ்வாய்க்கிழமை காலை திருக்கேதீஸ்வரத்தை சென்றடையும்.
உலகசைவத்திருச்சபை வருடாந்தம் நடாத்திவரும் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை கடந்த (7)யாழ்ப்பாணம்தொண்டமானாறு செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
காரைதீவைச்சேர்ந்த கதிர்காம பாதயாத்திரைக்குழுத்தலைவர் வேல்சாமி தலைமையில் இப்பாதயாத்திரை கடந்த 7நாட்காளக வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றது.
இன்று 2018.02.13ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வர பாதயாத்திரை நடைபெற்றுவருகிறது. உலகசைவத்திருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் ஜயாவின் எற்பாட்டில் நடைபெற்றுவரும் இப்பாதயாத்திரை இம்முறை 3வது வருடமாக நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவைச்சேர்ந்த பாதயாத்திரைக்குழுதத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் வருடாந்தம் கதிர்காமம் வெருகல் மண்டுர் திருக்கேதீஸ்வரம் ஆகிய 4 திருத்தலங்களுக்கு பாதயாத்திரை சென்றுவருவது தெரிந்ததே