தொற்றா நோயினால் 1 இலட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

பைஷல் இஸ்மாயில் -

2017 ஆண்டில் மட்டும் 1 இலட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொற்றா நோயினாலும், 3017 பேர் விபத்தினாலும் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறான உயிரிழப்புக்கள் மூலம் எமக்கு பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்துகின்றது என்று அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் தெரிவித்தார்.

”வரும் முன் காப்போம்” எனும் தொனிப் பொருளில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ளவர்களுக்கான தொற்றா நோய் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (27) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இயந்திர மயமாக்கப்பட்ட வாழ்க்கை வட்டத்துக்குள் இன்று மனிதர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். அந்தளவுக்கு தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. இதனால் எமது வேலைகளை மிக இலகுவாக செய்யக்கூடியதாக இருந்தாலும் அதைவிடக் கூடியளவு நோய்களை எமது உடலுக்குள் உள்வாங்கக் கூடியவர்களாக நாம் மாறிவருகின்றோம்.
ஒரு அரச திணைக்களத்தில் கடமையாற்றுகின்றவர் தனது ஓய்வு நிலையை அடையும் முன்னர் 45 வயதில் தொற்றா நோய்க்கு ஆளாக்கப்பட்டு அவர் உயிரழப்பாராயின் மீதமான 15 வருடங்கள் அரசாங்கத்துக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் பாரிய பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்விடயத்தை நாம் அறிந்தும் அறியாதவர்களாக இருந்துகொண்டு, இந்த வாழ்க்கை வட்டத்திலிருந்து வெளியேற முடியாதவர்களாக சிக்கித் தவிக்கின்றோம். இதிலிருந்து விடுபடுவதென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். அந்தளவுக்கு எமது உடல் நிலை பழக்கத்துக்கு வந்துவிட்டது. இதிலிருந்து நாம் வெளியேறினால் மாத்திரமே எமது ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும். இல்லை என்றால் எமது ஆயுள் மிகக் குருகியதாக மாறிவிடும்.
அளவுக்கு அதிகமான உணவும், போசாக்கு குறைந்த உணவுப் பழக்கத்தினால் நாம் தொற்றாய் நோய்க்கு ஆளாகுவதுடன் எமது பிள்ளைகளையும் போசாக்கு அற்ற பிள்ளைகளாக ஆளாக்கி விடுகின்றோம்.
இதனால், பாடசாலை மட்டத்தில் 50 வகையான மாணவர்களுக்கு குருதிச் சோகை காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 50 வகையான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மிக மந்த நிலைமையில் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் போசாக்கு அற்ற உணவுகளை நாம் கொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், சிறு வயதில் அவர்களை தொற்றா நோய்க்கு ஆளாக்கக் கூடிய பெற்றோர்களாக நாம் இருக்கின்றோம்.

இதிலிருந்து எம்மக்களை பாதுகாப்பதற்காக வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியின் விஷேட வழிகாட்டலின் கீழ் சுகாதார அமைச்சு பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இதற்காக பல கோடிக்கணக்கான நிதிகளையும் செலவு செய்து வருன்றது. என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -