திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் குளத்தில் அல்லிப்பூ பரிப்பதற்கு தோணியில் சென்ற ஐந்து பேர் தோணி கவிழ்ந்ததில் இன்று (11) உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவெளி,02ம் வட்டாரத்தைச்சேர்ந்த ஐவர் எனவும் அதில் நான்குு சிறார்கள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்காக சென்ற ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் பூ பரிப்பதற்காக குடும்ப
பெரியவருடன் நான்கு சிறார்களும் தோணியில் சென்றுள்ளனர்.
இதேவேளை தோணி கவிழ்ந்ததில் ஐவரும் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மரணம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.