உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 126வது
ஜனனதினப் பெருவிழாவும் சுவாமி விபுலாநநந்த கற்கைகள் நிறுவக
அறநெறிக்கற்கைகளின் ஆரம்ப நிகழ்வும் நாளை (27) செவ்வாய்க்கிழமை
காரைதீவில் ரதபவனி ஊர்வலம் என்பவற்றுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றமும் பொதுமக்களும் இணைந்து இவ்ஏற்பாட்டைச்செய்துள்ளது.
ஆன்மீக அதிதியாக மட்டு.மாநில இ.கி.மிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமாநந்தா ஜீ பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் கே.விமலநாதன் கௌரவஅதிதிகளாக பிபிசி சிரேஸ்ட ஊடகவியலாளர் பூ.சீவகன் மட்டக்களப்பு சுவாமிவிபுலானந்த நூற்றாண்டுவிழாக்குழுத்தவைர் க.பாஸ்கரன் காரைதீவு
பிரதேச செயலாளர் க.லவநாதன் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துசிறப்பிக்கின்றனர்.மேலும் கௌரவ அதிதிகளாக த..யசோதரன் (அதிபர் மட்.சிவானந்தாவித்தியாலயம் தேசியபாடசாலை) திருமதி. திலகவதி ஹரிதாஸ் ( அதிபர் மட்.விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் ) த.கைலாசபிள்ளை (தலைவர் விபுலாநந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம்) பொ.செல்வகுமார்
(தலைவர் முருகன் ஆலயம் - மண்டூர); ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
காலையில் காரைதீவு விபுலாநந்த சதுக்கத்திலுள்ள அடிகளாரின் சிலைக்கு
மலர்மாலை அணிவித்தலுடன் ரதங்களின் ஊர்வலம் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலோடு பிரதானவீதியூடாக நடைபெறும்.
ஊர்வலம் விபுலாநந்த மணிமண்டபத்தையடைந்ததும் அங்குள்ள சுவாமியின்
இல்லத்தில் விசேட பூஜை ஆராதனை திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்துதல் தொடர்ந்து மணிமண்டபத்தில் சிறப்புநிகழ்வு பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறும். சிறப்புச்சொற்பொழிவை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தவுள்ளார்.
இல்லத்தில் விசேட பூஜை ஆராதனை திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்துதல் தொடர்ந்து மணிமண்டபத்தில் சிறப்புநிகழ்வு பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறும். சிறப்புச்சொற்பொழிவை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தவுள்ளார்.