இந்துகலாசார திணைக்களத்தின் சுவாமிவிபுலாநந்தர் நாட்காட்டி கிழக்கெங்கும் விநியோகம்!
படங்கள் காரைதீவு நிருபர்- முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126வது ஜனனதினம் இன்றாகும்.(27.3.2018) அவர் ஞாபகார்த்தமாக இங்குகலாசார திணைக்களம் வெளியிட்ட சுவாமியின் படம் பொறித்த நாட்காட்டி கிழக்கெங்கும் விநியோகிக்கப்பட்டது.
கிழக்குமாகாணகல்வியமைச்சின் செயலாளர் திசாநாயக்க திருமலை வலயக்கல்விப்பணிப்பாளர் கே.விஜேந்திரன் திருமலை உவர்மலை விவேகானந்த வித்தியாலய அதிபர் கே.ரவிதாஸ் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோருக்கு காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்றமுன்னாள் தலைவர் விரி.சகாதேவராஜா வழங்கிவைப்பதைக்காணலாம்.