இன்று ஸ்ரீராமகிருஸ்ணரின் 183வது ஜனனதினப்பெருவிழா காரைதீவு விழாக்கோலம் : கோலாகலம்!

காரைதீவு நிருபர் சகா-
கவான் ஸ்ரீ இராமகிருஸ்ணபரமஹம்சரின் 183வது ஜனனதினவிழா (23) வெள்ளிக்கிழமை காலை காரைதீவில் ஊர்வலம் அன்னதானம் என்பவற்றுடன் சிறப்பாக நடைபெற்றது.
காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கமும் பொதுமக்களும் இணைந்து தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் ஏற்பாடுசெய்த இப்பெருவிழாவால் ஊர் விழாக்கோலம் பூண்டது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநிலத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தா மஹராஜ் ஆகியோர் கலந்துசிறப்பித்தார்கள்.
காலையில் சாரதா சிறுமியர் இல்லத்திலிருந்து நன்கு அலங்கரிக்கப்பட்ட பகவான் ஸ்ரீராமகிருஸ்ணர் அன்னை சாரதா சுவாமி விவேகாநந்தர் ஆகியோரின் 3அழகியரதங்களின் ஊர்வலம் 07 பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்றது.
முன்தாக இல்லத்தில் விசேட பஜனையை சுவாமி பிரபுபிரேமானந்தா ஜீ நடாத்தினார்.பின்பு ரதங்களுக்கு தீபாராதனை காட்டி தேங்காய்உடைத்து வழியனுப்பினார்.
மட்டுப்படுத்தப்பட்ட உள்வீதிகளினூடான இடம்பெற்ற ஊர்வலத்தினைத் தொடர்ந்து சாரதா இல்லத்தில் ஆன்மீகஅருளுரையும் அன்னதானமும் நடைபெற்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -