க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் 28.03.2018 அன்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியில் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இப்பாடசாலையிலிருந்து இம் முறை பரீட்சைக்கு 191 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் தமிழ் மொழி மூலம் 25 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 03 மாணவர்களும் 28 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 8ஏ சித்திகளை 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையில் இதுவரை அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த வருடமாக காணப்படுவதாகவும் 2016 ம் ஆண்டு 14 மாணவர்கள் மாத்திரம் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும் இம்முறை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்முறை உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.