கிழக்கில் 32சபைகளுக்கான முதல்அமர்வுகள் 27 முதல் ஏப்ரல் 16வரை!


கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சலீம் தெரிவிப்பு!
காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்திலுள்ள 45உள்ளுராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மை இல்லாத 32சபைகளுக்கான முதல் அமர்வுகளுக்கான திகதிகளை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அறிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமிடம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 32சபைகளுக்கான முதல் அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பத்திரிகை விளம்பரம் என்பன ஓரிரு தினங்களில் வெளிடப்படவுள்ளன.
அமர்வு பற்றிய விபரம்!
எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9.30மணிக்கு சம்மாந்துறை பிரதேசசபைக்கான முதல் அமர்வும் காலை 11.30மணிக்கு காரைதீவு பிரதேசசபைக்கான முதல்அமர்வும் மாலை 3மணிக்கு நிந்தவூர் பிரதேசசபைக்கான முதல் அமர்வும் நடைபெறவுள்ளது.
27ஆம் திகதி முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது பிறந்ததினமான அன்று காரைதீவுப்பிரதேசசபைக்கான இந்த முதல் அமர்வு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள் 28ஆம் திகதி அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் பிரதேசசபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறும். 29ஆம் திகதி திருக்கோவில் பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேசசபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் 2ஆம் திகதி கல்முனை மாநகரசபைக்கான முதல்அமர்வும் நாவிதன்வெளி பிரதேசசபைக்கான முதல் அமர்வும் நடைபெறும்.

மீதி பெரும்பான்மையின சபைகளுக்கான முதல் அமர்வுகள் ஏப்ரல் 16ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -