அங்கே பார் பார் Bar
+++++++++++++++++
Mohamed Nizous
அங்கே பார் பார் Bar
எங்கடவனும் குடிக்கான் பார்
இவனைப் போல் எருமைகளால்
இனத்துக்கே கேவலம் பார்.
சனத்துக்கும் கஷ்டம் பார்.
-அத்திக்காய் காய் காய்
மூதேவிகள் சில பேர்கள்
மூக்குமுட்டக் குடிப்பார் பார்.
போதையிலே செய்கின்ற
பொறுக்கித்தன விளைவைப் பார்.
குடிவெறியால் செய்பவற்றை
இனவெறியாய் பார்ப்பார் பார்.
இடை நடுவில் அப்பாவிகள்
அடிபடுவார் வெறியர்களால்
அடிபடுவார் வெறியர்களால்.
இன்னுமொரு எங்கடவன்
தண்ணி போட்டு அடிக்க முன்னே
உலமாக்கள் இளமாட்கள்
ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
நலமாகச் சொல்வதனை
நம்பியவன் திருந்தாவிடின்
பலம் கொஞ்சம் காட்டியேனும்
பலாய்களினைத் தடுத்திடுவோம்
பலாய்களினைத் தடுத்திடுவோம்.