இன்று சம்மாந்துறைப் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டது.
அது போன்று இன்னும் உள்ள சபைகளிலும் தாங்களே ஆட்சி அமைப்போம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட வட்டாரத் தகவல்கள தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் அம்பாரை மாவட்டத்தில் இரண்டு பிரதி அமைச்சர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்பீட உறுப்பினர்கள் அத்துடன் கட்சியின் செயலாளர் தவிசாளர் அடங்கலாக ஒருமித்து இருக்கும் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.
அத்துடன் போனால் போகட்டும் போடா.... என்னும் பாடலைப் போன்றல்லாது ஏன் போகிறார் என்னும் காரணம் அறியவதற்கு, என்று கட்சி முற்படுகிறதோ அன்றுதான் கட்சிக்கு வெற்றியுண்டு.
அதுவரை இருப்பதும் இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.