திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரை தாக்கி அச்சுருத்தியமை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(19) உத்தரவிட்டார்.
லைட்வீதி,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபருக்கெதிராக திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றங்களில் பல கொள்ளை,திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் கந்தளாய் நீதிமன்றில் பொலிஸாரை தாக்கி அச்சுருத்தியமை மற்றும் கடையொன்றில் கொள்ளையிட்டமை போன்ற வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமரைவாக இருந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு கந்தளாய் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்