முஸ்லிம் காங்கிரஸ்-சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி! மக்கள் காங்கிரஸுக்கு அதிஷ்டம்..!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதிமையச்சர் ஹாரீஸ் அவர்களை நான் தொடர்பு கொண்ட கேட்ட போது, ‘உண்மைதான்’ என பதிலளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அம்பாறை மாவட்டத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இறக்காம், பொத்துவில் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவிசாளர்களாகவும் அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த இருவர் பிரதித் தவிசாளர்களாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் பதவிகளை ஏற்பதுடன் உப தவிசாளர்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இருவர் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபை தொடர்பில் இன்று (27) தீர்மானிக்கப்படவுள்ளது!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -