ஒற்றுமைமூலம் முப்பத்து மூன்று இலட்சம் பணத்தை சேகரித்து முழு நாட்டு முஸ்லிம்களின் இதயத்தை வென்றனர் அக்கரைப்பற்று மக்கள் அப்பணம் இனவாதிகளால் அகதியாக்க பட்ட மக்களுக்காக கொடுக்கப்படவுள்ளது மாஷா அல்லாஹ்
தனித்தனியாக அல்லாமல் அக்கரைப்பற்றில் இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஒற்றுமையாக பெரும் தொகை திரட்டி கொடுத்துள்ளது இந்தப்பணம் உள்ளூரில் மாத்திரமே அதாவது வீடு வீடாக சென்று சேகரிக்கப்பட்டது இந்த ஒற்றுமையை பாராட்டிய ஆகவேண்டும்
அது மாத்திரமல்ல அனைத்து ஊர்களிலும் ,வெளிநாடுகளிடமிருந்தும் பல இலட்ச பணங்கள் அகதியாக்கப் பட்ட மக்களுக்காக தினம் தினம் செல்கின்றன பள்ளிவாசல்கள் சம்மேளம் வேறாகவும் ,அமைப்புக்கள் வேறாகவும் பணங்கள் சென்றடைகின்றன
அவ்வாறு இல்லாமல் ஒற்றுமையாக அமைப்புக்கள் ,தனிநபர்கள் பள்ளிவாயல் சம்மேளத்தினிடம் ஒப்படைத்தால் பெரும் தொகை பணம் கையில் வந்தடையும் பின்னர் உடனடியாக ஆலோசனை செய்து திட்டமிட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யலாம்
தனித்தனியாக பணங்கள் சென்றடையும் போது பணங்கள் சரியாக பிரயோசனப்படாது மொத்தமாக பெரும் தொகை சென்றடையும் போது அவர்கள் திட்டமிட்டு தனது தேவைகள் தானாகவே நிவர்த்திசெய்வார்கள் அம்மக்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைத்து ஊர்மக்களுக்கும் ,இனக்கலவரம் என செய்தி காதில் வந்தடைந்தவுடன் அந்த மக்களுக்கு என்ன பங்களிப்பு செய்யலாம் என துடித்த வெளிநாட்டு உறவுகளுக்கும் பல கோடி நன்றிகள்
இனிவருங்காலங்களில் ஒற்றுமையாக செயற்படுவோம் இன்ஷா அல்லாஹ்