சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா 24.03.2018 அன்று நுவரெலியா நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவு பொறுப்பாளரும், காங்கிரஸின் உப தலைவியுமான அனுஷா சிவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிலிப், முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான எஸ்.இராஜதுரை, கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மகளிர் நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகளுடன், பெண்களின் விசேட உரையும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.