கண்டியில் இடம்பெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விசேட செயல்முறை திட்டம்


ண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விசேட செயல்முறை தற்சமயம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்து, நஷ்டஈடு வழங்கும் நோக்கில் விசேட நடமாடும் சேவை ஒன்று இன்று கண்டி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடமாடும் சேவை ஒழுங்க செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையின் போது, கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சேவையின் போது மதஸ்தலங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கும் நஷ்டஈடுகளை வழங்கும்படி பிரதமர் ஆலோசனை விடுத்துள்ளார்.
இந்த நஷ்டஈடு கொடுப்பனவுகளை விரைவில் பூர்த்தி செய்யும்படி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் மற்றும் மதஸ்தலங்களை புனர்நிர்மாணம் செய்யும் சிரமதான வேலைத்திட்டம் ஒன்று இன்று ஆரம்பமானது.
மஹா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை இராணுவம் பூரண ஆதரவை வழங்கியுள்ளது. கண்டி மாவட்டத்தின் திகன பிரதேசத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானது.
இந்த வேலைத்திட்டத்திற்கு குண்டசாலை பிரதேச செயலகத்தின் உதவியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தமது முழுமையான பங்களிப்பையும், ஆதரவையும் வழங்கியுள்ளனர். 200க்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -