(வீடியோ) குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

ற்று நேரத்துக்கு முன்னர் சுமார் 25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்பொழுது பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிருவாகத்தினருடனம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கலந்தாலோசித்தார்.
இதேவேளை, பள்ளிவாசல் குண்டர்களால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டதுடன், \பள்ளிவாசலுக்கு பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியதாகவும் நிருவாகத்தினர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அமைச்சர், பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியினூடாக அங்கு தற்போதைய நிலைமை தொடர்பில் எடுத்துரைத்தார். தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -