கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு ஆறு பேரைக்கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் கந்தளாய் குளக்கோட்டன் விளையாட்ரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற போதே சம்பியனாக அஸ் ஸபா இளைஞர் கழக தெரிவாகியுள்ளது. பதினைத்திற்கும் மேற்பட்ட தமிழ்,சிங்கள இளைஞர் கழகங்கள் பங்கு பற்றியதோடு இறுதிப் போட்டியில் அஸ் ஸபா இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது. இறுதிப்போட்டிகளுக்கு கந்தளாய் இளைஞர் கழக அதிகாரி எம்.ஜி.எஸ்.ரத்னாயக்க மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
Home
/
LATEST NEWS
/
திருகோணமலை
/
கந்தளாய் இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு.