புல்மோட்டையில் பதினைந்து வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் விளக்கமறியலில்.


எப்.முபாரக்- 
புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியஇளைஞயொருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(18) உத்தரவிட்டார்.
 
புல்மோட்டை,கமாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மூன்று வருடங்களாக சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய இளைஞனை சனிக்கிழமை (17)கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 சிறுமி குச்சவெளி வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -