வெலிமடை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசம்

க.கிஷாந்தன்-
வெலிமடை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 29.03.2018 அன்று மதியம் 12 மணியளவில் வெலிமடை பிரதேச சபையின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.

வெலிமடை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் ஊவா மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் மங்கள விஜயநாயக தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச சபையின் தலைவராக, ஐக்கிய மக்கள் சுநதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு தெரிவான எஸ்.ஏ.ஆர்.பந்துசேனவும், உப தலைவராக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான சீத்தா சமரவீரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திறந்த முறை வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.

இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான இந்திக சம்பத் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.ஏ.ஆர்.பந்துசேன அவர்களும் போட்டியிட்டனர்.

இதில் 20 வாக்குகளைப் பெற்று எஸ்.ஏ.ஆர்.பந்துசேன அவர்கள் தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட இந்திக சம்பத் அவர்களுக்கு 18 வாக்குகளே பெறமுடிந்தது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சீத்தா சமரவீர உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தலைவர் தெரிவுக்காக எதிர்கட்சி உறுப்பினர்களிடம் வினவியபோது, வேறு ஒருவரை தெரிவு செய்ய முன்வராததனால் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

41 உறுப்பினர்களைக் கொண்ட வெலிமடை பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மூவர் வாக்களிக்கவில்லை என்பததோடு, இந்த தலைவர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 15 பேர் வாக்களித்து ஆதரவு தெரிவித்தமை குறிப்பித்தக்கது.

வெலிமடை பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 15 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 5 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 18 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 03 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -