அட்டன் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை 25.03.2018 அன்று அட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது.
அட்டன் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை அட்டன் கோட்ட பொலிஸ் அதிகாரி அம்பேபிடிய அவர்களின் தலைமையில் 25.03.2018 அன்று காலை 7.00 மணியளவில் அட்டன் டன்பார் மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ பரிசோதனையும், வாகன பரிசோதனையும் இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பில் அட்டன் பொலிஸ் நிலையத்தின் உயரதிகாரிகள், மகளிர் பொலிஸ் பிரிவு ,மோப்ப நாய்ப்பிரிவு உட்பட அட்டன் கோட்டத்துக்குட்பட்ட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்
இவ்வணிவகுப்பு அட்டன் நகரினூடாக சென்றதுடன் இதில் வாகன ஊர்வலமும் இடம்பெற்றன.