கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் - இருவர் விளக்கமறியலில் - பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

க.கிஷாந்தன்-
கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் 19.03.2018 அன்று காலை திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான முன்னாள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் உட்பட மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணையின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த பொழுது இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அட்டன் நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
கொட்டகலை நகரில் இடம்பெற்ற விபத்து சம்பவம் பாதிக்கப்பட்ட இளைஞன் தொடர்பாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்களிடத்தில் முரண்பாடுப்பட்டதாக கோரி திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் மலர்வாசகம் உட்பட மேலும் ஒருவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த புகாரை வைத்தியசாலை வைத்தியர்கள் பதிவு செய்ததுடன், சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் வரை தாம் பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
இதன்படி கடந்த இரு தினங்களாக பணிபகிஷ்கரிப்பில் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் உட்பட தாதியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
19.03.2018 அன்று காலை மலர்வாசகம் உட்பட மேலும் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதை தொடர்ந்து பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. இருந்தும் பொலிஸ் நிலையம் சென்று ஆஜாராகிய இவர்களை விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இவர்களை அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது இவரை எதிர்வரும் 29ம் திகதி வரை 10 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி உத்திரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -