ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தின் அதிபர் செய்னம்புவை உண்மைக்கு புறம்பாக விமர்சிப்பது சரியானதா.?


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
ல்குடா மத்தி கல்வி வலயத்தின் கீழ் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தின் ஊட்டற் பாடசாலையாக உள்ள ஹிஜ்றா வித்தியாலயத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அதிபாராக கடமையாற்றி அந்த பாடசாலையை கல்குடாவில் முக்கிய பாடசாலையாகவும், கல்குடா பிரதேசத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக நிருவாக திறமையுடன் கடமையாற்றும் முஸ்லிம் பெண் அதிபர் என்ற கெளரவத்தை தன்னிடிடம் வைத்துள்ள ஒரே காரணத்திற்காக கல்குடா சமூகத்துடன் எந்த வித தொடர்பும் அற்ற ஒரு நபரினால் குறித்த அதிபரும், பாடசாலையும் காலத்துக்கு காலம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றமை பிரதேசத்தில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ளது.
கடந்த உள்ளாரட்சி மன்ற தேர்தல் காலத்தின் பொழுது குறித்த அதிபரும் ஆசிரியர்களும் யானைச்சின்னத்திற்காக தேர்தல் பிரச்சார குழுவாக ஈடுபட்டு வந்ததாகவும் குறித்த சமூகத்துடன் தொடர்பற்ற நபரினால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க பட்டிருந்த விடயம் சம்பந்தமாக தேர்தல் திணைக்களத்தினால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் குறித்த விடயத்தினை சமூகத்தினினுடைய பிரச்சனையாக கருத்தில் கொண்டு சமூகத்திற்கு தெளிபடுத்தும் முகமாக சகோதரர் ஆதம் றிஸ்வின் நேரடியாக பாடசாலைக்கு சென்று குறித்த நபரினால் விமர்சிக்கப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானதும் மட்டுமல்லாமல் குறித்த நபர் தனிப்பட்ட முறையில் அதிபருன் கொண்ட காற்புணர்ச்சி காரணமாகவும், பாடசாலை நிருவாகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலுமே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்ற செய்தியினை சமூக வலைத்தளங்களுக்கு பக்கசார்பில்லாமல் நியாயமான முறையில் வழங்கியிருந்தார்.

ஆனால் குறித்த நபர் பழைய குருடி கதவை திறடி என்னும் பழமொழிக்கு அமைவாக மீண்டும் கடந்த மார்ச் 4ம் திகதி அதிபரையும் பாடசாலையையும் விமர்சிக்க தொடங்கியுள்ளார். குறித்த பாடசாலைக்காக மிகவும் செய்னம்ப்பு ஹமீட் என்பவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அதிபர் என்ற வகையிலும், முதலாம் ஆண்டிலிருந்து எனது மகனும் அந்த பாடசாலையில் கல்வி கற்கின்ற ஒருவர் என்ற ரீதியில் எனக்கு குறித்த் அபாடசாலை மீது இருக்கின்ற நன்மதிப்பின் அடிப்படையில் இக்கட்டுரையினை மக்களுடைய தெளிவிற்காக எழுதுகின்றேன்.

இவ்வாறு கல்குடா சமூகத்துடன் எந்த தொடர்பும் அற்ற நபராக இருக்கின்ற குறித்த நபரானவர், பாடசாலை அமைந்துள்ள மூன்றாம் வட்டரத்தில் பிறந்தும் பாடசாலையின் முக்கிய பிரசானையாக காணப்பட்ட காணிக்கொள்வனவிற்கு ஒரு சதமேனும் வழங்கிடாத ஒருவர் என்ற வகையில் இவ்வாறு உண்மைக்கு புறம்பாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபரையும், பாடசாலையின் ஆசிரியர்களையும், நிருவகாத்தினையும் விமர்சிப்பதானது அவருடய அசிலியத்தினை வெளிச்சம் போட்டு காட்டும் விடயமாக பார்க்கபடும் அதே இடத்தில் குறித்த நபர் திட்டமிட்டு இவ்வாறான விமர்சனங்களை மேற்கொண்டு பாடசாலை நிருவாகத்தினை பெற்றோர்களிடமிருந்து ஓரங்கட்ட செய்வதே அவருடைய விமர்சனத்திற்கான குறிக்கோளாகவும், தெளிவாக காணக்கூடிய அடிப்படை உண்மையாகவும் இருக்கின்றது.

அந்த வகையில் பாடசாலையின் இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அருகிலுள்ள காணியொன்றினைக் கொள்வனவு செய்ய முடிவெடுக்கப்பட்டு அதற்காக சுமார் 35 இலட்ச ரூபாய்கள் தேவையாக இருந்தது. அதனைக் குறுகிய காலத்தில் சேகரித்துக்காணியினைக் கொள்வனவு செய்ய காணிக் கொள்வனவுக் குழு அமைக்கப்பட்டு இதுவரை சுமார் 25 இலட்ச ரூபாய் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. இது ஓட்டமாவடி மூன்றாம் வட்டார ஹிஜ்றா வித்தியாலயத்தில் குறித்த அதிபர் செய்னம்பு ஹமீட்டினுடைய பாரிய அர்ப்பணிப்பாக பார்க்கப்படுவது. அத்தோடு கடந்த 29.01.2018ம் திகதி திங்கட்கிழமை முதற்கட்ட பணத் தொகை காணி உரிமையாளருக்கு வழங்கி மீதி பணம் பத்து இலட்சம் ரூபாய்கள் மிக விரைவில் தருவதான வாக்குறுதியோடு உறுதிப் பத்திரமும் பாடசாலையின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பாரியதொரு சவாலான இலக்கை ஒரு பெண் அதிபராக தனது நேரகாலத்தை அர்ப்பணிப்புச் செய்து அடைவதென்பது ஒரு இலேசான காரியமல்ல. அத்தோடு இதற்காக இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பாடசாலை முகாமைத்துவக் குழு, காணிக் கொள்வனவுக் குழுமிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது ஓட்டமாவடி03ஆம் வட்டார வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டியவிடயமாகும். இவ்வாறான விடயங்களை பொறுத்துகொள்ள முடியமல் குறித்த பாடசலையின் நிருவாகத்தினையும், அதிபரையும் விமர்சித்து வரும் சமூகத்துடன் தொடர்பற்ற குறித்த நபருக்கு எதிராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளரும், அதனோடு சேர்த்து குறித்த பாடசாலையில் நீண்ட காலமாக அதிபராக செயற்பட்ட பிரதி கல்வி பணிப்பாளரும், சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவருமான எம்.எல்.ஏ. ஜுனைட் ஆகியோர்கள் முன்னின்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஓட்டமாவடி சமூகத்தின் எதிர்ப்பார்ப்பு மட்டுமல்லாமல் முழு கல்குடாவினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் குறித்த நபருடைய விமர்சனத்தில்… பாடசலைக்கு தற்பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்ப்பதில்லை எனவும் மாணவர்களுடைய தொகை குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அதற்கு அதிபரே முழு காரணம் என்பதாக விமர்சித்துள்ளார். 2007ம் ஆண்டு செய்யனம்பு ஹமீட் பாடசலையினை பொறுப்பேற்கும் பொழுது பாடசாலையை அண்டிய பிரதேசத்தில் குறித்த பாடசாலை மட்டுமே ஆரம்ப பாடசாலையாக இருந்தது. அதற்கு பிற்பாடு சரீஃப் அலி வித்தியாலயம், தாருள் உளூம் வித்தியாலயம் என இரண்டு ஊட்டற் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்தான் மாணவர்களின் எண்ணிக்கை ஹிஜ்றா வித்தியாலயத்தில் குறைவடைந்தமைக்கான முக்கிய காரணமாகும். இதனையும் குறித்த அதிபரின் தலையில் போட்டு மிளகாய் அரைப்பதற்கு முற்படும் குறித்த சமூகத்துடன் தொடர்பில்லாத நபருடைய கருத்துக்கள் அவருடைய அசிலியத்தின் உச்ச கட்டமாகவே சமூகத்தால் பார்க்கப்படுகின்றது.
மேலும், இப்பாடசாலையின் அதிபர் தனக்கான பதவித் தரத்தை கொண்டிருக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிபர் 2006ம் ஆண்டு இடம் பெற்ற அகில இலங்கை அதிபர் தரத்திற்கான பரீட்சை எழுதி சித்தியடைந்தவர் என்பதோடு 2012ம் ஆண்டு அதிபர் தரம் இரண்டிற்கு சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு கல்குடாத் தொகுதியில் அதிபர் நியமனம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவைகள்தான் குறித்த சமூகத்துடன் தொடர்பில்லாத நபருக்கு ஏற்பட்டிருக்கும் மன நோயாகவும், பழிவாங்க துடிக்கும் அடிப்படை காரணமாகவும் பார்க்கப்படுகின்றது. அதிபர் செய்யனம்பு ஹமீட்டினுடைய அதிபர் தரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அதற்கான ஆவணம் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் அதிபர் செய்னம்பு ஹமீட் குறித்த பாடசாலையினை 2007ம் ஆண்டு பொறுப்பேற்றதற்கு பிற்பாடு பின்வரும் அடைவுகளையும், அபிவிருத்திகளையும் பாடசலைக்கு முன்னின்று செய்துள்ளார்.

01- 2013ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்ச்சையில் 12 மாணவர்கள் சித்தியடைதல். (இவருடைய காலத்தில்தான் பாடசாலையில் கூடுதலன மாணவர்கள் புலமை பர்சில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்)

02- 2014ம் ஆண்டு 10 மாணவர்கள் சித்தியடைதல்.(இவருடைய காலத்தில்தான் வெளியில் இருந்து திறமையான ஆசிரியர்களை கொண்டு வந்து புலமை பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கப்பட்டுள்ளது).

03- பிரதி அமைச்சர் அமீர் அலி ஊடாக பாடசலைக்கு இரண்டு மாடி கட்டத்தினை பெற்றுக்கொடுத்தல்

04- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ஊடாக பாடசாலைக்கு இரண்டு மலசல கூடங்களை பெற்றுக்கொடுத்தல்

05- பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிதியின் ஊடாக பாடலைக்கான பாதுகாப்பான நுளைவாயிலினை அமைத்தல்.

06- முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி ஊடாக 45000 ரூபாய்கள் பெறுமதியான மின்னிணைப்பினை பெற்றுக்கொடுத்தல்.

07- பிரதி அமைச்சர் அமீர் அலி ஊடாக போட்டோ கொப்பி இயந்திரத்தினை பெற்றுக்கொடுத்தல்.

08- முன்னால் கிழக்கு முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் ஊடாக கணனி இயந்திரங்களை பெற்றுக்கொடுத்தல்

09- அரசாங்கத்தின் 500000 ரூபாய்கள் நிதி உதவி ஊடாக பாடசாலையின் சுற்றுமதில், நீர்தாங்கி என்பதனை அமைத்து கொடுத்தல்.

10- 275000 ரூபாய்கள் நிதி உதவியுடன் வகுப்பறைகளை நவீன மயமாக்குதல்.

11- பாராளுமன்ற உறுப்பினர் அலி-ஷாஹிர் மெளலான ஊடாக 150000 ரூபாய்கள் பெறுமதியுடன் மாணவர்களுக்கான சிறுவர் பூங்காவினை அமைத்து கொடுத்தல்

12- தற்பொழுது அரசாங்கத்தின் 700000 ரூபாய்கள் நிதி உதவியினூடாக சகல தேவையும் உடைய மலசல கூடங்களை அமைத்தல்.

இவ்வாறு அதிபராக 2007ம் ஆண்டு குறித்த பாடசலையினை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு பல அபிவிருத்திகளையும், அடைவுகளையும் ஏற்படுத்தியுள்ள அதிபர் செய்னம்பு ஹமீட் சமூகத்தில் முகவரி அற்ற, சமூகத்துடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களினால் உண்மைக்கு புறம்பான விதத்தில் விமர்சிக்கப்படுகின்றமை மற்றும் வெற்றிகரமக செயற்பட்டு வரும் குறித்த ஹிஜ்றா ஆரம்ப பாடசாலைக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்துவதற்கும் எதிராக பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர்கள், சமூக அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் ஆகிவைகளில் உதவியுடன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமும், அதன் பிரதி கல்வி பணிப்பாளரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குறித்த பாடசாலையினை நேசிக்கின்ற ஒவ்வொருவரினதும் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
இந்த மூன்றாம் வட்டாரத்தில் பிறந்த ஒருவர், இந்தப்பாடசாலையின் வளர்ச்சியில் எவ்வித பங்கும் கொண்டிருக்காத ஒருவர், காணிக்கொள்வனவிற்காக ஒரு சதமேனும் வழங்காத ஒருவர் உரிய தரப்பினரிடமிருந்துவிசாரிக்காமல் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதானது இந்த மூன்றாம் வட்டாரத்தில் பிறந்த ஒருவர், இந்தப்பாடசாலையின் வளர்ச்சியில் எவ்வித பங்கும் கொண்டிருக்காத ஒருவர், காணிக்கொள்வனவிற்காக ஒரு சதமேனும் வழங்காத ஒருவர் உரிய தரப்பினரிடமிருந்துவிசாரிக்காம
சதமேனும் வழங்காத ஒருவர் உரிய தரப்பினரிடமிருந்துவிசாரிக்காமல் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதானது 


  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -